இப்படி படிக்கலாமா?



அதிகாலை நேரம் உறக்கத்தை தனியே உறங்கவைத்துவிட்டு, பத்து நிமிடங்களில் படிப்பதற்கு ஆயத்தமானேன்.. புத்தகத்தைத் திறந்தவுடன் பலர் கூறியது நினைவுக்கு வந்தது…


காலை நேரம் கத்திப் படி சட்டென புத்தி -இல் ஏறும் என்றார் ஒருவர். கத்திப்படித்தால் அவை காற்றோடு போய்விடும் , எனவே முனுமுனுத்து படி மூளைக்குள் புகுந்துவிடும் என்று சொன்னார் ஒருவர் … வந்திருந்த விருந்தாளியோ, வாய் விட்டு படி , உச்சரிப்பு சுத்தமாகும் என்றார் அக்கறையுடன். படித்தவுடன் அவற்றை எழுதி பார்த்தால் மனதில் பதியும் என்றார் மற்றொருவர்., அப்படியே மனப்பாடம் செய்துவிடு அப்போதுதான் மொத்த மதிப்பெண்ணும் என்றார் எவரோ .., படித்து படித்து யாரிடமாவது அதை ஒப்பித்து பழகு என்றார்கள் பல பேர் ....


குழப்பத்தில் புத்தகத்தை புரட்டியபோது , புரிந்து படி, என்ன படிக்கிறோம் என்பதை அறிந்து படி, பிறருக்கு எப்படி இதை விளங்க வைக்கலாம் என்று உணர்ந்து படி, அது உன் ஆயுள் முழுதும் மறக்காது என்றார் என் அப்பா …


அப்படி படித்த போது ஐம்பது சதவிகித நிம்மதியும் அதன் பின் அம்மா தந்த காபியை அருந்தியவுடன் முழுமையான நிம்மதியுடன் மேல் மாடியை விட்டு கீழ் இறங்கினேன் .… பள்ளிக்கு கிளம்ப....


பிடித்தமானவளே !!!




எனை உனக்கு பிடிக்குமா என்று

எதார்த்தமாய் நீ கேட்டாய்...

உனை எனக்கு பிடிக்காவிட்டால்
பிடித்திருப்பது எனக்கு பைத்தியம் என்பேன்...

என்னவெல்லாம் பிடிக்கும் என்று
எண்களிட்டு கூற சொன்னாய்...

எதில் தொடங்கி எங்கு முடிக்க
உன்னிடம் எல்லாமே
எனக்குப் பிடிக்கும்....

நான் ரசித்தப் பிறர் படைப்புக்கள்.

----------------------------------------------------------------------
முதியோர் இல்லம்.

இது ஒரு மனிதக்காட்சிசாலை
பால் குடித்த மிருகங்கள் இங்கெ வந்துப்
பார்த்துவிட்டுப் போகின்றன.

நம் காதல் நிஜமென்றால்...

நொடியை

கோடிப்பிரிவுகளாய்ப்பிரித்து

அவ்வொரு பிரிவில்

உனைப்பிரிந்தாலும் என்

உயிர் பிரியும்

அப்பிரிவுக்குள்ளெ...

மேகம் ...

நின்றாலும் சென்றாலும்
அழகு தரும் - தான்

நினைத்தால் மட்டுமே

மழை தரும்.

நினைவுப்புதையல்


உறக்கம் சுரக்கும் அதிகாலையில்
உரக்கக் கத்திய பாடங்கள்

சில நிமிட பிரயாணதிற்க்காக
சிரத்தையுடன் பேருந்தில் பிடித்த இடம்

25 பைசா


மாலை நேரம் , இன்னும் வீட்டுக்கு செல்ல ஒரு மணி நேரமாவது ஆகும்" என்ற சலிப்பில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தேன். தற்காலிகமாக அமர்ந்து செல்ல தலைதெறிக்க மக்கள் பேருந்தை நோக்கி ஒடினர். நான் எழாம் வகுப்பு இளம்பருவம் என்றாலும் முண்டிஅடித்து இடம் பிடிக்க என் மனம் இடம் தரவில்லை.

அடுத்த பேருந்து அடுத்த பேருந்து என்று நேரம் நீராக ஒடியது.சோர்ந்து நின்றிருந்த நான் சற்றெ எதார்த்தாமாய் பார்க்க , அழகாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அச்சுமுறுக்குக் கடை ஒன்று. சுவை எனும் முறுக்கேறிருந்த அவற்றை பார்த்தவுடன் அருகில் சென்றேன்.

அச்சுமுறுக்கின் வாசனையில் வாயில் கூடுதலாய் எச்சில் சுரந்தது.
எவ்வளவு என்று கேட்கும்முன்னெ, என் பார்வைக்கு பதிலாய் கடைக்காரர் "நாலனா தம்பி" என்றார். அந்த சமயம் என்னிடம் இருந்தது ஒரே ஒரு 25 பைசா தான் (அன்றைய நாளில் 1990-ல் எனக்கு, பேருந்தில் சென்று வர இலவச பஸ் பாஸ், ஒரு நாள் செலவுக்கு எனக்கு வீட்டில் வழங்கப்பட்ட்ப் படி 50 பைசா), அன்று என்னவொ என்னிடம் வெறும் 25 பைசா மட்டும் தான். பைசாவை கடைக்காரனிடம் கொடுத்த மறுகணமே, கடித்து முறுக்கை உருக்குலைத்தன என் பற்கள்.

இந்த கணம் தான் மனத்தை பல கேள்விகள் கேட்கதூண்டின., யார் முகத்தில் இன்று வ்ழித்தேன், இப்படி ஒரு மனகஷ்டம், அதுவும் இந்நேரத்தில், அதாவது நான் கொடுத்த 25 பைசா "செல்லாது, வேற கொடு" என்று கடைக்காரன் சொன்னவுடன் கடித்த முறுக்கின் சுவை முழுவதும் கசந்தது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்றேன்.

"அண்ணெ, நாளைக்கு வர்ரப்பொ, கண்டிப்பாக் குடுக்றேன்", இப்ப என்னிடம் இல்லை" என்று கெஞ்சிக் கேட்டபோதும், கடைக்காரன் தன் மனசு கல் என்று திரும்ப திரும்ப நிருபித்தான். அருகில் அலுவலகத்தில் பணிபுரியும் அண்ணனையோ , அப்பவோயோ அழைக்க அலைபேசி வசதி இல்லை அன்றைய தினம்...  நேரில் சென்று அவர்களை நாட கடைக்காரனும் அனுமதிக்கவில்லை...

இருட்டத் தொடங்கியது.முடிந்தவரை முயற்சி செய்தும், கடைக்காரன் என்னை விட்டபாடில்லை. இந்த நிலைமை நிலைகுலைய வழியே இல்லையா என்ற தருணத்தில் எனக்குப் பரிட்சயமில்லாத ஒருவர் என் பக்கத்தில் வந்தார். என்னுடயப் பள்ளிச்சீருடை அணிந்திருந்ததால் அவரும் என்னுடைய பள்ளி தான், என்பதை உறுதிசெய்துகொண்டேன். ஆனால் உதவி கிடைக்குமா என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம். என் நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் "இந்தா 25 பைசா , இதைக் கடைக்காரனிடம் கொடு" என்றவுடன், என் உயிர் போய் வருவதை முதன் முதலாய் உண்ர்ந்தது அன்று தான். "இனிமேல் பைசாவை சரியாக வைத்துக்கொள்" என்று சொல்லிவிட்டு அவர் பேருந்தை நோக்கி ஒடினார்.

திகைத்து நின்ற நான் திரும்பிப் பார்த்தேன், நான் போகவேண்டியப் பேருந்து வருவது தெரிந்தும். அந்த உதவி செய்த ஜீவனை நினைத்து நகராமல் நின்றேன்.அன்று உணர்ந்தது 25 பைசாவின் மதிப்பு மட்டும் அல்ல,வெறும் மதிப்பெண்ணுக்காக படித்த "காலத்தினார் செய்த உதவி" குறளின் அர்த்தமும் தான்.!!!

மண்ணுக்குள் !!!

மண்ணுக்குள் போனபின்னெ
மதமென்ன ஜாதியென்ன - நம்
மண்டை ஓட்டின் மீது
மண்புழு சறுக்கி விளையாடும் !!!

அளவுக்குமீறி நாம்  கொண்ட
ஆசையென்ன ஆட்டமென்ன
அத்தனையும் மொத்தமாய்
ஆழ்குழிக்குள் அடங்கிவிடும்


உயிரை சுமந்துசெல்லும் - இந்த
உடலின் பயணம்
எங்கு முடியும் என்று
எவருக்குத் தெரியும் ?

மரணித்த பின்னும் நாம்
மண்ணில் வாழ விரும்பினால் - நல்ல
மனிதனாய் வாழ்ந்திடுவோம்  - இம்மணித்துளியிருந்தே!!



வறுமைக்கோடு

இரை தேடி அலையும் எங்கள் வாழ்வு
இரையாகுது தினம் வறுமைக்கு- நல்ல

உடையும் எடையும் இல்லா உடலொடு
- நிலை
உறைவிடம் தேடுகிறோம் தினம் தினம்.

உரிமை கொண்டாடும் வறுமையொ
- பசியெனும்
கடமையை செய்கிறது தவறாமல்!

வயிறு தினம் காய்ந்தாலும் - எங்கள்
விழி ஈரம் ஏனோ காய்வதில்லை.

எங்களுக்கும் தினம் இலையில் உணவுதான் - ஆனால்
இலையும் உணவும் இன்னொருவருடையது.

எங்களது சிரிப்பில் இறைவனைக் காணலாம் - ஆனால்
அழுகையின் ஆழத்தின் யார் அறிவார்?

நதியோரம் நீர் என்றும் கரைதொடுவது போல் எங்கள்
விழியோரம் ஏனோ வற்றாத ஈரம்.

நாற்றம் கொண்ட தோற்றத்தோடு
என்று விடியும் என்ற வீற்றத்தோடு
உலா வருகிறோம் உலகில் தினம்.

எங்கள் வறுமைக்கோட்டை
அழிக்கும் அழிப்பான் எங்கே? யாரிடம்?